செயற்கைகோள் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்க கணிப்பு மகி அவசியம்

நடிகர் மாதவன் ஐயா நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மைய படுத்தி ராக்கெட்ரி என்ற படத்தை எடுக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கும் பொழுது சீனா,ஐரோப்பா மற்றும் அமேரிக்க நாடுகள் பல முறை முயற்சிசெய்துதான் செவ்வாய் கிரகத்திற்கு செயறகைகோளை அனுப்பி வெற்றி பெற்றன ஆனால் இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோளை அனுப்பி வெற்றி கண்டது என்று மாதவன் கூறினார். இந்த பேட்டி பற்றி பலர் மாதவனை கிண்டலும் கேலியும் செய்தனர். இதற்கு முற்று புள்ளிவைக்குமாறு திருச்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சந்திராயன் திட்ட தலைவரும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஒய்வுபெற்ற அண்ணாதுரை அவர்கள்,மாதவன் பேசியதை பற்றி கூறியதாவது.

உலகம் முழுவதும் கோள்களின் நகர்வும் இடமாற்றங்களை கணிப்பதுதான் பஞ்சாங்கம். இதை ஆங்கிலத்தில் ஆல்மனாக்(ALMANAC) என்று அழைப்பார்கள். இவற்றின் உதவியோடு ஒரு செயற்கை கோளினை விண்ணில் ஏவமுடியும். ஒரு குறிப்பி்ட்ட செயற்கை கோளை விண்ணுக்கு அனப்ப வேண்டும் என்றால், அந்தகோள் எங்கு நிற்கிறது என்று பஞ்சாங்கம் மூலமாகவே கணிக்கமுடியும். மாதவன் கூறிய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ற வார்த்தை மட்டுமேதான் தவறு என்று கூறினார் மற்றபடி பஞ்சாங்கத்தின் உதவியுடன்தான் செயற்கை கோள்கள் ஏவப்படுகின்றன. பஞ்சாங்கம் ஆண்டுக்கு ஆண்டு துல்லியமாக கணிக்கப்படவேண்டும். பஞ்சாங்கம் தப்பு என்று கூறுவது தவறு என்றும். பஞ்சாங்கத்தை வைத்து ஜோசியம் கூறுவதும் தவறு என்று மயில்சாமி ஐயா அவர்கள் கூறினார்.