ஞானம் – அகத்தியர்

ஞானம்-–-அகத்தியர்

காணுதற்கே யின்னமொருக ருவைக் கேளு
கருணையுள்ள புலத்தியனேக ணிச வானே
பூணுதற்கு நவ்வெழுத்தின் மேலே மைந்தா
புத்தியுடன் மவ்வெழுத்தாற்கி ரகந் தோன்றும்
பேணுதற்கு நவ்வெழத்தின் மேலே சென்றால்
பிலமாக மவ்வெழுத்தின் கீழ தாகத்
தோணுதற்குச் சிவாலய முக்தி யுண்டு
சுத்தமுட னவ்விடத்தே கண்டு தேறே.

இன்னும்மொரு செயலினைக் கூறுகிறேன் புலத்தியனே கேட்பாயாக பஞ்சாட்சரத்துள் உள்ள ‘ந’ என்கின்ற எழுத்தின் மேல் மனதை ஒருநிலைப்படுத்தினால், அந்த எழுத்தினால் கிரகம் தோன்றும் அவ்வெழுத்தின் மேலே முதலில் சென்றால் அந்த எழுத்தின் கீழ் சிவாலய முக்தியுண்டு. தூய்மையுடன் இருந்து அவ்விடத்தைக் கண்டு தேர்ச்சியுறுவாயாக.

கண்டுமனந் தேர்ந்தந்தந தியின் முழ்கிக்
கமலமலர் சிவாலயத்தை பூசை பண்ணிச்
சண்டமென்ற பூரணத்தின் கீழ தாகச்
சபையான சிவாலயங்கள்ந திக ளுண்டு
கொண்டுநின்ற அநேகதமாம யிர்பா லத்திற்
கொள்ளநின்ற சிவாலயங்கள்ந திக ளுண்டு
வண்டெனவே வாசிமலரத னையெ டுத்து
மகத்தான சிவாலயத்தை பூசை பண்ணே.

அவ்விடத்தைக் கண்டபின்பு அந்த நதியில் மூழ்கி தாமரை மலருக்கு ஒப்பான சிவாலயத்தை பூசை செய்யவும். பூரணத்திற்குக் கீழ் சிவாலயங்களும் நதிகளும் உண்டு. அந்நதிகளை மயிர்ப்பாலங்கொண்டு கடக்கவும். வாசியாகிய மூச்சு ஓட்டத்தினைக் கொண்டு சிவாலயத்தை பூசை செய்யவும்.

பூசையது செய்வதற்குப லத்தைக் கேளு
புனிதமுட னட்டாங்க சித்தி யாகும்
நேசமுள்ள வட்டாங்க சித்தி யானால்
நிலையாக சிவயோகநி னைவிற் றோன்றும்
பாசமில்லா சிவயோகநி னைத்த போதே
பரமகுரு தேசிகனும்ப சியாய் வந்தே
ராசனென்ன சிவராச யோகங் காட்டி
நடுமனையின் வீசைவகை நல்கு வாரே. – அகத்தியர் பரிபூரணம் 400

இந்த பூசையினால் உன்டாகும் பலத்தைக் கேளு. அஷ்டாங்கு யோகங்களும் சித்தியாகும். அஷ்டாங்கு யோகங்கள் சித்தியானால். சிவயோகம் நினைவில் தோன்றும். சிவயோகம் நினைவில் தோன்றியவுடனே சிவனும் வந்து சிவராஜயோகம் செய்து காட்டி வீட்டின் நடுவில் வந்து அமர்வார்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *