தியானம் என்றால் என்ன ? தியானத்தில் யார் வெற்றி பெற்றவர்கள்

தியானம்

தியானத்தில் பலவகைகள் உண்டு. எனக்கு தெரிந்த தியானத்தை நான் பகிர விரும்புகிறேன். பொதுவாக தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி அதை தன்வசப்டுத்த முயற்சி செய்வது. மனம் என்பது என்ன? மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. மனதை ஒருமுகப்படுத்த எதாவது ஒருவிஷயத்தில் நம் எண்ணங்களை குவிக்கவேண்டும். இதனால் தான் தியானம் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது எண்ணங்களை குவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த பொருள் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஒரு சிலையை பார்த்தோ அல்லது ஒரு விளக்கை பார்த்தோ நம் எண்ணங்களை ஒருமுக படுத்த முயற்சிக்கலாம். புதியாதாக பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு பொருளை பார்த்து தியானம் செய்வது சற்று கடினமா இருக்கும். இதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்து அந்த மந்திர உச்சரிப்பிலேயே உங்கள் கவனத்தை செலுத்தவேண்டும் அல்லது உங்கள் சுவாசத்தை மட்டும் கவனித்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

இப்படி மனதை ஒருநிலை படத்த முயற்சி செய்வது தியானமா? கண்டிப்பாக இல்லை. இது தியான நிலையை அடைய முயற்சிக்கும் ஒரு நிலையே. இந்த நிலையைதான் தாரணை என்று கூறவார்கள். இது அட்டாங்கு யோகத்தில் தியானநிலைக்கு முந்தைய நிலை. தாரணை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது உங்கள் கவனத்தை செலுத்துவது இப்படி கவனத்தை செலுத்துவது மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தாரணை நிலையில் இருந்து தியான நிலைக்கு உங்களை எடுத்து செல்லும். இந்த தியான நிலை முதல் நாள் அன்றே உங்களுக்கு வாய்த்து விடாது. பயிற்சி பெற பெற ஒருநாள் நீங்கள இந்த தியான நிலை அனுபவிக்கலாம். இந்த தியான அனுபவ நிலை அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. (இந்த அனுபவ நிலையை வேறு பதிவில் காணலாம்)

யாரெல்லாம் தியானம் செய்யலாம்? தியானம் யார்வேண்டுமானாலும் செய்யலாம். தியானம் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. நம் உடலையும் மணதையும் ஆரோயக்யமாக வைக்க யார்வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். என்னை பொருத்தவரை தியானத்தை இரு விதமான நோக்கத்துடன் செய்வார்கள் ஒன்று உலகியியல் ரீதியாக தன் வாழ்க்கை நல்லமுறையில் வைத்துக்கொள்ள மற்றொன்று ஆன்மீக ரீதியாக இறைவனுடைய முழு அருளை பெற.

தினமும் ஒரு 30 நிமிடம் நேரத்தை ஒதுக்கி தியானம் செய்ய பழகுங்கள் அது பல சந்தர்பங்களில் உங்களை பாதுகாக்கும். தியானம் செய்வதால் நீங்கள் கோடீஸ்வரனாகிவிடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை. பல சந்தர்பங்களில் அது உங்களை சரியான முடிவுகளை எடுக்க உதவிபுரியும் அந்த முடிவு உங்கள் வாழ்கை பாதையை நல்ல முறையில் மாற்றி அமைக்கும். உலகியியல்ரீதியாக வாழ்கையை நல்லமுறையில் அமைக்க தியானத்தின் மூலமாக எளிமையாக அடையலாம். இதற்கு ஒரே தடை நம்முடைய சோம்பேரிதனம். சோம்பேரிதனம் படமால் தியானதில் அமர பழகவேண்டும்.

இப்போது ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் வெற்றி அடைய முடியுமா என்று பார்போம். பெரும்பான்மையான ஆன்மீகவாதிகள் தியானம் செய்வதால் நமக்கு அனைத்து சக்திகளும் கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆன்மீக ரீதியாக ஒருவன் தியானத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அவனை முதல் அதற்கான தகுதியுடைவானாக்கவேண்டும், அதென்ன தகுதி? ஆம் ஆட்டாங்கு யோகத்தில் முதல் நிலையான இமயத்தை பின்பற்றவேண்டும். கீழ் உள்ள பண்புகளை பெற்ற மக்களே இமயத்தை கைவர பெற்றவர்கள்.

எந்த உயிரையும் கொல்லாதவன்,
புலன் அடக்கம் உள்ளவன்,
திருடாதவன்,குற்றமில்லாதவன் மற்றும் அவர்களுடன் சேராமல் இருப்பவன்
போதை வஸ்துக்களுக்கு அடிமையாகாதவன்
காம இச்சை இல்லாதவன்

ஆகிய தகுதிகளை உடையவனே இமயத்தை கைவர பெற்றவன் ஆவான். இவர்களே 100% சதவிகிதம் தியானத்தில் வெற்றி பெற்று மரணமில்லா பெறுவாழ்வை அடையமுடியும். இதுவே தியானத்தின் உச்சகட்ட வெற்றி. மரணமில்லா பெருவாழ்வு என்பது தன் உடம்பையே வேதியல் மாற்றம் செய்து இந்த பிரபஞ்சத்தோடு கலந்துவிடுவது அதவாது இறைவனோடு கலந்துவிடுதல். இப்படி இறைவனின் முழு அருளை பெற்றவர்களை யாரலும் கொள்ள முடியாது. இதையே வள்ளல் பெருமான் இந்த பாடல் மூலமாக கூறுகிறார். இந்த பாடலின் ஒருவரி விளக்கம் “எந்த பொருள்கொண்டு்ம் அவர் உடம்பை அழிக்கமுடியாத ஒரு உடலை இறைவன் அவருக்கு கொடுத்துவிட்டதாக கூறுகிறார்

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே – (மெய் என்றால் உடல்)

நம் பாராத நாட்டில் குறிப்பாக சித்தர்கள் பூமியான நம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பல மகான்களை தன் உடம்பை மண்ணில் வீழாமால் இந்த பிரபஞ்சத்தோடு கலந்துள்ளனர் உதாரணமாக

மீரா பாய்
பட்டிணத்தார்
இராமலிங்க சுவாமிகள் என்கிற வள்ளல் பெருமான்
ஆணடாள்
மத்துவர்
பத்ரகிரியார்

இப்படி பல மகாண்கள் தன் உடம்பை மறைத்து பிரபஞ்சத்தோடு கலந்துள்ளனர். இவர்களே தியானத்திலும் யோகத்திலும் முழுவெற்றி பெற்றவர்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *