தியானம் தொடர்ச்சி

ஆறு ஆதார சக்கரம்

மனம் குறித்த அடிப்படை விஷயங்களில் நாம் தெளிவு பெற வேண்டும் மனமானது மேல் மனம் ,உள் மனம் மற்றும் அடி மனம் என்ற மூன்று நிலைகளில் இயங்குகிறது நம்முடைய விருப்பு வெறுப்பு வெளிப்படையாக நம்க்கு தெரியும் மனம் மேல் மனமாகும். நம்முடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் போராட்டங்கள், எதிர்பார்ப்புகள் , எண்ணங்கள் யாவுமே இந்த மேல மனத்தில் அறிய முடியும்.

நம்முடைய வாழ்கையின் அணுபவ பதிவுகள் காலப் போக்கில் உள் மனத்திற்குள் தள்ளப்படும். உள்மனத்திற்கும் கீழ் ஆழத்தில் மிக நீண்ட காலத்து பதிவுகளான நம்முடைய ஆசை,நிராசை, ஏக்கம், துக்கம்,விருப்பு,பயம் யாவும் அடிமனதில் தங்கிவிடும்.

தியானத்தில் எழுச்சி நிலை ஆனந்தம்தான். தியானத்தில் ஆனந்தம் ஏற்படாது கலைப்பும் சலிப்பும் ஏற்ப்பட்டால் அது தியானம் அல்ல. தியானத்தின் மூலம் உடலும் உள்ளமும் பூரண ஒய்வு பெறுகின்றது. தியானம் செய்யும் போதல்லாம் மனதின் ஆற்றல் பெறுகுகின்றது. தியானத்தினால் இயற்கையை அளும் சக்தி கிடைக்கிறது. சாதாரண அளவில் புலப்படாத பல பேருண்மைகள் தியானத்தினால் தெரிகின்றன.

தியானம் செய்யும்போது மயிர்கால்கள் எல்லாம் நன்கு திறந்துகொள்ளும். தியானத்தில் பலவகையுண்டு. தன் ஆன்மாவின் மீது தியானம் செய்வது ஆத்மதியானமாகும். ஒரு வடிவத்தை மனதில் நிறுத்தியோ அல்லது வடிவமில்லாமல் மந்திரத்தை ஜபித்து செய்யும் தியானம் மந்திர தியானமாகும். உள்ளுக்குள் இழுக்கும் மூச்சையும் வெளியில் விடும் மூச்சையும் கவனித்து கொண்டு தியானம் செய்வது சுவாச தியானமாகும். கடவுளை மனதுக்குள் கொண்டுவந்து பார்பது கடவுள் தியானமாகும்.

அனைத்து நோயளிக்ளுக்கும் மிகுந்த நன்மை தருவது தியானமாகும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தியானம் செய்தால் இரத்த அழுத்தம் குறையும். தியானம் நல்ல அழ்ந்த தூக்கத்தை தரும். மனதை ஒருநிலைப்படுத்தும். மூளையை ஒரு நிலையில் நிறுத்தி நம் ஆற்றலை அதிகப்படத்தும். தியானத்தின் முதற்பலன் மனதிற்கு அமைதி தருவது. தியானத்தினால் மனதில் உள்ள படபடப்பு குறையும். முகத்தில் உள்ள இறுக்கம் மறைந்து சிரிப்பு ஏற்படும்.

பத்மாசனம்,சித்தாசனம்,ஸ்வஸ்திக் ஆசனம், சுகாசனம் ஆகிய நிலைகளில் தியானம் செய்வதால் முதகெலும்பு வலுப்பெறும் ஆயுள் நீடிக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தியானம் நல்ல ஆரோக்கியம் தரும்.

தியானம் செய்யும்போது இறுக்கமில்லாத உடை அணிய வேண்டும். தியானம் செய்ய உட்காரும் இடம் மேடு,பள்ளம் இல்லாத சமமான தளமாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமும் சுத்தமும் உள்ள இடமமாக இருக்க வேண்டும். தினமும் நான்கு முறை தியானம் செய்யலாம் சூரிய உதயத்திற்கு முன், அதிகாலை நேரத்தில், நண்பகல் 12 மணியளவிலும், மாலை சூரியன் மறைந்த பின்பு, நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவிலும் தியானம் செய்யலாம்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே — அகத்தியர்

தியானத்தின் மூலம் நம் மனதை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதினால் மந்திரம் செபிக்க வேண்டாமாம், பிராணாயாமம் செய்ய வேணடாம். வாசியை ஆதாரங்களில் நிறுத்த வேண்டாம் என்கிறார் அது தானாகேவே நடக்கும் ஆனால், மனது செம்மையாக்க மந்திரத்தை செபிக்க வேணடும் , வாயுவை உயர்த்த வேண்டும்,வாசியை நிறுத்தி பழக வேண்டும் பிறகு தான் மனம் செம்மையாகும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *