நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலறு மாதமாய் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத் தாண்டி.

 விளக்கம்
ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சை எடுத்து உண்பவன் தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றில் வித விதமான வண்ண மலர்களை காண்கிறான். நந்தவனத்தின் அருகில் ஒரு குளம் இருப்பதையும் பார்தான் ஆனால் என்ன பயன் குளத்தின் நீரை எடுத்து நந்தவனத்திற்கு பயன்படுத்த முடியவில்லையே என்று நினைத்தான். தனக்கு ஒரு குடம் (தோண்டி) இருந்தால் , அந்த குடத்தை வைத்து குளத்து நீரை தினசரி நந்தவனத்தில் ஊற்றினால், பல மலர்கள் பூக்கும் அந்த மலர்களை விற்று ஒரு மண்டபம் கட்டுவேன் என்றும் அதில் பல ஆண்டிகளை தங்கவைப்பேன் என்றும் கற்பனையில் மிதந்தான்.

 பக்கத்து ஊரில் உள்ள குயவனிடம் சென்று தனக்கு ஒரு குடம் தானமாக வேண்டும் என்று கேட்டான் அந்த குயவன் அதற்க்கு இணங்கவில்லை. ஆண்டி பத்து மாதங்கள் அங்கு இருந்து குயவனிடம் மன்றாடினான். குயவனும் மனம் இலகி ஒரு குடத்தை தானமாக கொடுத்தான்.

ஆண்டி தனக்கு தோண்டி கிடைத்த சந்தோசத்தில். தோண்டியை தலையில் வைத்து ஆடாத ஆட்டம்மெல்லாம் ஆடி தோண்டியை கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் மன்றாடி வாங்கியதோண்டியை பத்து நாழிகைகளில் உடைத்து விட்டான்.

 இது ஒரு சாதாரன ஆண்டி,குயவன்,தோண்டி கதையல்ல…………………..

பத்து மாதம் தவம் செய்து பெற்ற இந்த மனித உடலை போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசை பட்டு மனித உடல் என்னும் தோண்டியை போட்டு உடைக்கின்றாயே. இந்த உடல் இருக்கும்போதே ஆன்மா இறையுடன் கலக்க வழி தேட வேண்டாமா என்று கேட்கிறார் கடுவெளி சித்தர்.

கடுவெளி சித்தர் காஞ்சிபுரத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று போகர் அவருடயை பாடலில் இவ்வாரு தெரிவிக்கிறார்.

 வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
வளமான திருக்காஞ்சிப் பதியலாச்சு


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *