நந்தீசர் வாழ்க்கை வரலாறு – பாகம் 1

நந்தீசர் வாழ்க்கை வரலாறு

வீரகன் என்பது நந்தீசர் இயற்பெயராகும். சிவகணங்களில் ஒருவராக இருந்த நந்தீசர் அன்னை உமையவளின் அந்தப்புரக் காவலராக இருந்தவர் ஆவார். ஒரு முறை கயிலையை விட்டு நீங்கிய அன்னை உமையவள், ‘கெளரி’ என்ற பெயருடன் பரமனை எண்ணித் தவமியற்றிக் கொண்டிருந்தார். அப்போது அடிகலன் என்ற அசுரனை அனுமதியின்றி சிவசந்நிதியில் புக அனுமதித்தால் நந்தீசர் பரமனது கோபத்துக்கு ஆளானார். பன்னிரெண்டு வருடங்கள் பூவுலகில் சிலாதர் என்னும் மகரிஷியின் புதல்வராகப் பிறந்து வசிக்குமாறு சாபமும் பெற்றார்.

சிலாதர் மகரிஷி தன் மனைவி சித்தரவதியுடன் இனிதே இல்லறம் நடத்தி வந்தார். ஒருநாள் சிலாதர் மகரிஷியின் ஆசிரமத்துக்கு சப்த ரிஷிகள் வந்தனர். அவர்களை வரவேற்று உபசரித்த சிலாதர் மகரிஷி சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பின் ரிஷிகளைத் தம் ஆசிரமத்தில் உணவு உண்டு செல்லுமாறு வேண்டினார். ஆனால் பிள்ளைகள் இல்லாத வீட்டில் தாங்கள் அன்னம் கொள்ள மாட்டோம் என்றுரைத்து விட்டுச் சென்றுவிட்டனர்.

உடனே மகரிஷி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இயற்றத் துவங்கினார். சிவபெருமான் அவரது தவத்தை மெச்சி மகரிஷி முன்பாகத் தோன்றி, “மகரிஷியே…. என்ன வரம் வேண்டும்?” என்று வினவ, மகரிஷி, “ஐயனே… என்றும் இறப்பே இல்லாத மகன் எமக்கு வேண்டும்” என்று வேண்டினார். அதுகேட்டுப் புன்னகைத்த இறைவன். “சிலாதர மகரிஷியே… யாகம் ஒன்றினை நீ செய்வாயாக. அவ்வாறு செய்தால் உனக்கு அப்படிப்பட்ட மகன் கிடைப்பான் எனவுரைத்து மறைந்தருளினார்.”

அதுகேட்டு மகிழ்ந்த சிலாதர் மகரிஷி உடனே தாம் யாகம் இயற்ற வேண்டி நிலத்தை உழத் துவங்கினார். அப்போது பூமியிலிருந்து அவருக்கு ஓர் மாணிக்கப் பெட்டி கிடைத்தது. அதனுள் ஜடா முடியோடு நான்கு கரங்களுடன் நந்திதேவர் இருந்தார். அதுகண்டு திகைத்த மகரிஷி, “ஐயனே… இதனை நான் எப்படி வளர்ப்பேன்?” என்று மயங்கினார். அப்போது, “மகரிஷியே.. மீண்டும் பெட்டியை மூடித் திற” என்று அசரீரியாக இறைவனது கட்டளை பிறந்தது.

உடனே மகரிஷி நந்தி தேவர் இருந்த பெட்டியை மூடித் திறக்க, அதனுள் ஓர் அழகிய குழந்தை இருந்தது. சிலாதர் மகரிஷி தனது யாகத்தை மகிழ்வுடன் செய்து முடித்தார். பின் அக்குழந்தை சிலாதர் மகரிஷி தம்பதியரின் அன்புப் புதல்வனாக வளர்ந்தது. இறையருளால் சிலாதர் மகரிஷி தம்பதிக்கு ஓர் மகனும் பிறந்தான்.

என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்று கடுந்தவம் இயற்றிப் பெற்ற பிள்ளை தன் பன்னிரெண்டாம் வயதில் மித்திர வருணரால் மரணமடைவான் என்று அறிந்து சிலாதர் மகரிஷியும் அவரது மனைவியும் பெருந்துக்கம் அடைந்தனர். வீரர்கள் பன்னிரெண்டு வருடங்களே பூவுலகில் வாழ வேண்டும் என்னும் சாபத்தால் உண்டான வினையது. ஆனால் இறை இரகசியம் சிலாதருக்கு எவ்வாறு புரியும்?……. தொடரும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *