ஒருநாள் தனது தாய் தந்தையர் மிகுந்த துயருற்று இருப்பதைக் கண்ட அப்பிள்ளை அதன் காரணம் என்ன? என்று தன் தாய் தந்தையரை வற்புறுத்தி வேண்டியது. அதற்கு அவர்கள் விபரம் கூறினர். அதுகேட்ட அப்பிள்ளை, “தந்தையே என்றும் இறவாத் தன்மை உடைய பிள்ளை கிடைப்பான் என்று தங்களுக்கு வரமளித்த அந்தச் சிவபெருமானிடமே இதற்கு நியாயம் கேட்கிறேன்” எனவுரைத்து திட வைராக்கியத்துடன் சிவபெருமானை எண்ணித் தவமியற்றத் துவங்கியது. பல ஆண்டுகளாகக் கடுந்தவம் இயற்றிய பின் அப்பிள்ளையின் முன்பாக இறைவன் தோன்றியருளினார்.

அப்போது நந்தீசர், என்றும் தான் இறையடி நீங்காதிருக்கவும், சிவகணங்களுக்குத் தலைமை வகித்திடும் அதிகாரத்துவமும், சிவத்துவங்களுக்கு ஆசானாக விளங்கும் மெய்ஞ்ஞானாசாரியத் தத்துவமும் இறைவனிடம் பெற்றார். பின் தேவர்களின் இதயக் கமலத்தில் இருந்து தோன்றிய சயஞ்ஞை என்பவளை மணந்து சிவலோகத்தில் எழுந்தருளும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பினார். இது நந்திதேவர் வரலாறு ஆகும்.
சித்தர்களுக்கு முதல்வனாம் சிவனாருக்கு அடுத்தபடியாக விளங்கும் நந்தீசரைப் பற்றி அகத்தியர்,
கூறுவேன் நந்தீசர் தந்தை தாய்மார்
குலாலரெனும் மரபுதனில் சென்றுமேதான்
வீருடனே பாண்டமது செய்து மல்லோ
வித்தகனார் நெடுங்காலம் சீவித்தே தான்.

என்று பாடியுள்ளார். அகத்தியர் பன்னிரெண்டாயிரம், நான்காவது காண்டம் 512 – ஆவது பாடலான இதில் அவர் நந்தீசர் குலாலர் (குயவர்) குலத்தில் பிறந்தவர் எனக் கூறுகிறார்.
ஆனால் போக முனிவர்,
முத்தமுடன் நந்தீசர் பிறந்த நேர்மை
மூதுலகோர் தானறியச் சொல்வேன் அப்பா
நித்தமது வைகாசி மாதமப்பா
நீடான விசாகமது நாலாங்காலம்
பக்தியுடன் தான் பிறந்த நந்திதேவர்
பாரினிலே தேவஸ்தான குருவுமாச்சே.
– 5897
குருவான தேவதா ஸ்தலங்கள் தன்னில்
கொற்றவனே நந்தியென்ற பேர் உண்டாச்சு
அருவான தேவேந்திரன் சாபத்தாலே
அப்பனே பிரம்ம குலந்தனில் உதித்து
உருவாகி மானிட ஜென்மமாகி
உத்தமனே கன்னியது வயிற்றில் தங்கி
திருவான நந்தி ரூபம் கொண்டு மல்லோ
சிறப்புடனே வந்துதித்த சித்துதானே.
– 5898
என்று கூறுகிறார். அதாவது சிவத்தலங்களில் நந்தியாக வீற்றிருந்தவர் தேவேந்திரன் சாபத்தால் பூவுலகில் பிறக்க நேரிட்டது வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிராமண குலத்தில் பிறந்தார் என்பது போக முனிவரது விளக்கமாகும்.
இவ்வாறு அகத்தியரும், போகரும் நந்தீசர் பற்றி மாறுபட்டுக் கூறியிருந்தாலும் தம்மைப் பற்றி நந்தீசரே தம் கலைஞானத்தில்,

ஆமப்பா வடதேசம் கயிலை தேசம்
அப்பனே என்தேசம் உத்தர தேசம்
வாமப்பா எனைச் சேர்ந்த சித்தர் சொல்வேன்
வளமான தசரதரும் வியாசர் தானும்
காமப்பா என் தம்பி வியாசர் தாண்டா
கண்மணியே தசரதன்தான் அம்மானாகும்
நாமப்பா தன்வந்திரி பகவான் தானும்
நலமாக எந்தனுக்குப் பிள்ளையாச்சே.
– 181
ஆமென்ற அசுவினி தேவதைகள் தானும்
அப்பனே எந்தனுக்குப் பேரராச்சு
வாமென்ற தந்தை சதாசிவன்தான் மைந்தா
வளமாக எந்தனுக்குத் தகப்பனாச்சு
நாமென்ற தாயார்தான் தேவியாகும்
நலமாக இத்தனைபேர் என்னைச் சார்ந்தோர்
காமென்ற தேவியுட கிருபையாலே
கைலாச சித்தனென்ற பேருண்டாச்சே.
– 182
தான் வடநாட்டுக் கயிலையைச் சேர்ந்தவர் என்றும், வியாசர் தன் தம்பி யென்றும், தசரதர் தன் அம்மான் என்றும், சந்திரகுலத்து வியாசரும், சூரியகுலத்து தசரதனும் தனக்கு உறவு என்பதால் சூரிய சந்திர குலத்தோர் அனைவருமே தம் உறவினர்கள் என்றும் கூறும் நந்தீசர், தன்வந்திரி பகவான் தனக்குப் பிள்ளை என்றும், அசுவினி தேவர்கள் தன் பேரர்கள் என்றும், தான் சிவன் மைந்தன், தன் அன்னை உமையவள், அவர்களின் பேரருளால்தான் கயிலாயச் சித்தன் என்னும் பேர் பெற்றதாகவும் கூறுகிறார்.

நந்தீசரி பற்றிப் புராணங்கள் கூறும் விஷயங்கள் வேறு. சித்தர்கள் அவர் பற்றிக் கூறும் விஷயங்கள் வேறு. சிவபெருமான் உட்பட அனைவருமே மனிதர் நிலையில் இருந்து உயர்ந்தவர்கல்தாம் என்று உரைத்துள்ளனர். அது போன்றே நந்திதேவரும் மனிதர் நிலையில் இருந்தே தம் நூல்களை இயற்றியுள்ளார்.
நந்தீசர் கற்ப மூலிகைகள் 32 – ஐ பற்றிக் கூறுகையில்
பார்த்திட்ட மலைகளிலே மூலிகை கேளும்
பரிவான கருநெல்லி கருத்த நொச்சி
பூர்த்திட்ட புல் சோதி பெரிய சோதி
புகழ்பெரிய வெள்ளைப் பூந்துத்தியோடு
ஏர்த்திட்ட கல்லுக்குள் கஞ்சமப்பா
எளிதான விருட்சங்கல் ரோம சாதி
கார்த்திட்ட கருவேலி கணங்க விருட்சம்
கறுத்திருக்கும் கொடிவேலி சேந்திராயே.
– 932
சேந்திராய் வெண்புரசு வெள்ளைக் கண்டன்
செங்கழலி செம்பல்லி குண்ட மாம்பாலை
காந்திராய் கசப்பான பசளையொடு
கடியதொரு பொற்சீந்தில் சாய்கை பேதி
ஆந்திரா கருவீழி கறுத்த வாழை
அதிவெள்ளை தூதுவளை கருத்த தில்லை
காந்திராய் கருப்பான கரிசாலை
கருத்தமத்தை வெண்காரை கல்லையாமே
– 933
ஆமப்பா மூவிலையாம் குருத்தினோடு
ஆச்சரியம் கருந்தும்பை வெள்ளைக் கரந்தை
ஓமப்பா வெண்பான ஆதண்டையோடு
உத்தமனே முப்பத்திரண்டு மூலி
வாமப்பா மலைதோறும் உண்டு உண்டு
மகத்தான மூலிகைதான் பரிசவேதை
காமப்பா ஒவ்வொன்றிற் சூதம் கட்டும்
கலந்துநின்ற வாசனைக்குப் பாஷாலாம் சாமே
– 934
சாகவே சரக்கான அறுபத்துநாலும்
தனதளவே வேதையுமாம் சகத்திரத்துக்கோடும்
சாகவே உபரசங்கள் நூற்றிரண்டு பத்தும்
சவளைபோல் சத்தாகும் இறங்கும் பாரு
சாகவே லவணமுதல் இருபத்தஞ்சும்
தனித்தனியே கட்டகும் சரக்கைக் கொல்லும்
சாகவே பண்ணாமல் இருத்தி வைக்கும்
சங்கற்ப விகற்பம் என்ற சட்டை போக்கே.
– 935
என்று கூறுகிறார். இந்த 32 கற்ப மூலிகைகளும் மலைகளில் கிடைக்கும். வாதத்திற்குப் பயன்படக்கூடிய இவற்றால் பாதரசம் மணியாகத் திரளும். இவற்றின் வாடை பட்டதுமே பாஷாணங்கள் செத்துமடியும்.

அறுபத்து நான்கு வகையாக சரக்குகளும் இவற்றால் வேதையாகும். உபரசங்கள் நூற்றிருபதும் சத்தாகும். உப்பு முதல் இருப்பத்தைந்து சரக்குகளும் கட்டும்.
இக்கற்ப மூலிகைகள் மனிதனைச் சாகாது இருத்தி வைக்கும் என்று நந்தீசர் மூலிகைகளின் சிறப்புப் பண்புகளை விளக்குகிறார்.
சித்தர்களின் வயதையோ அல்லது அவர்கள் வாழ்ந்த காலத்தையோ அறுதியிட்டுக் கூற இயலாது. ஆனால் சிலரது நூலின் மொழி, நடை, கூறப்பட்டுள்ள முறை முதலியவற்றைக் கொண்டு சித்தர்களது காலத்தைக் கணக்கிடுவது தவராகும். எனவே சொல்லப்பட்டுள்ள விஷயத்தைக் கொண்டே கணக்கிடுவது நல்லது.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்