இந்த கதையில் சித்தர்கள் மாமிசம் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் விளக்கலாம்.

போகர் நவபாக்ஷான உருவ சிலையை கட்டும் பணியில் தீவிரமாக இருந்த காலத்தில் கோரக்கரும், புலிப்பாணி சித்தரும் போகருக்கு உதவி செய்துக்கொண்டிருந்தனர். ஒரு சமயம் கோரக்கர் ஒரு முயலை பிடித்துக்கொண்டு வந்தார். அதை புலிப்பாணியும் கோரக்கரும் இணைந்து சமைத்துக் கொண்டிருந்த பொழுது கோரகர் அதன் மனத்தில் வீழ்ந்து அதை ருசிக்க எண்னினார். ஒரு முயலின் காலை எடுத்து பக்குவமாய் வெந்து விட்டதா என்று சுவைத்து முழுக்காலையும் தின்றுவிட்டார். இதை பார்த்த புலிப்பாணி குருவின் கோபத்திற்கு ஆளாவோம் என்று எச்சரித்தார். அதற்கு கோரக்கர் நான் அதை பார்த்து கொள்கிறேன் என்று அவரை அடக்கிவிட்டார்.
போகர் கை காலை சுத்தம் செய்து உணவு அருந்த அமர்ந்தார். பிறகு உணவை பரிமாறி ஒரு முயல் காலை எடுத்து வைத்தார் கோரக்கர். போகர் அதை உண்டு மீண்டும் ஒருகால் வேண்டும் என்று கேட்டார். கோரக்கர் மீண்டும் ஒரு காலை எடுத்து வைத்தார். போகர் அதையும் உண்டு. கோரக்கரின் சமயல்திறனை பாரட்டிவிட்டு மீண்டும் ஒருகாலை கேட்டார். கோர்க்கர் மூன்றாவது காலையும் பரிமாறினார். மூன்றாவது காலையும் உண்டு, போகர் உன் கைபக்குவம் மிக மிக அருமை மேன் மேலும் என் பசியை தூண்டுகிறது மீண்டும் ஒருகாலை பரிமாறுமாறு கேட்டார்.

அதற்கு கோரக்கர் கால்கள் தீர்ந்து விட்டது என்று கூறினார். போகர் உடனே நான் மூன்று கால்கள் தானே சாப்பிட்டேன் என்று வினவினார். கோரக்கர் நான் பிடத்த முயலுக்கு மூன்று கால்கள்தான் இருந்தது என்றார். போகர் அது எப்படி முயல்களுக்கு நான்கு கால்கள்தானே என்று மீண்டும் வினவினார். அதற்கு கோரக்கர் மீண்டும் இல்லை குருவே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் இருந்தது என்றார். அதற்கு போகர் சரி சரி என்று சாப்பிட்டு முடித்து சென்றுவிட்டார். அதற்கு கோரக்கர் மற்றும் புலிப்பாணியும் அப்பாடி தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சி விட்டார்கள்.
ஒரு பவுர்ணமி அன்று போகர் ஒரு பெண் வேண்டும் என்று புலிப்பாணி மற்றும் கோரக்கரிடம் கேட்டார் போகருக்கு ஏற்ற ஒரு பெண்ணை கொண்டுவர. கோரக்கரும் புலிப்பாணியும் கிளம்பினர். அப்படி புறப்படும்பொழுது. போகர் அவர்கள் நெற்றியில் உருவத்தை மறைக்கும் மை ஒன்றை வைத்தார். அதை நெற்றியில் வைப்பதன் மூலம் அவர்களுடைய உருவம் யார் கண்களுக்கும் தெரியாது. போகர் புலிப்பாணியின் நெற்றியில் வைத்துவிட்டு கோரக்கரின் நெற்றியில் வைப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டார்.
இருவரும் கிராமத்துக்கு சென்று தூங்கிகொண்டிருந்த ஒரு பெண்ணை தூக்கி சென்றனர். அதை அறிந்த அப்பெண் கூச்சளிட்டு கதறினாள். கதறள் சத்தம் கேட்டு ஊர் மக்கள் கூடினர். புலிப்பாணி யாற்கண்களுக்கும் தெரியாததனால் அவர் தப்பித்து விட்டார் ஆனால் கோரக்கர் ஊர் மக்களிடம் சிக்கிக்கொண்டார். ஊர் மக்கள் கோரக்கரை மரத்தில் கட்டி உடல் புன் ஆகுமாறு அடித்தனர். கோரக்கரிடம் யார் உன்னிடம் இவ்வாரு செய்ய சொன்னார்கள் என்று வினவினார்கள். அதற்கு கோரக்கர் குருவை காட்டிக்கொடுக்காமல் மௌனமாக இருந்தார். ஊர் மக்கள் இதை கண்டு மிகவும் கோபம் கொண்டனர். நீ உண்மையை கூறவில்லை என்றால் நாளை கழுமரத்தில் ஏற்றி உன்னை கொன்றுவிடுவோம் என்றனர். இதை அறிந்த புலிப்பாணி கோரக்கரை காப்பாற்றுமாறு போகரிடம் வேண்டினார். அதை கேட்ட போகர் சிரித்துக் கொண்டே நாளை பார்போம் என்றார்.

மறு நாள் வரை ஊர் மக்களிடம் கோரக்கர் எதுவும் கூறாததால் கோபம்முற்று தண்டனை நிறைவேற்ற முடிவு செய்து கழுமரத்திற்கு அழைத்து சென்றனர். பிறகு கோரக்கரிடம் கடைசி ஆசையை வினவினர் அதற்கு அவர் தன் குருவான போகரை காண வேண்டும் என்றார். இதை அறிந்த போகர் அங்கே வந்தார். கோரக்கர் குருவை கண்டவுடன் வணங்கி தொழுதார்.
போகர் கோரக்கரை ஆற தழுவி கோரக்கா இப்பொழுதாவது உண்மையை சொல் நான் உன்னை காப்பாற்றுகிறேன். நீ பிடித்த முயலுக்கு எத்தனை கால் என்று வினவினார். அதற்கு கோரக்கர் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் குருவே என்று பதிலுரைத்தார். அந்த பதிலை கேட்ட போகர் சிரித்தபடியே மறைப்பு மையை கோரக்கர் நெற்றியில் வைத்தார். கோரக்கரும் காப்பாற்றப்பட்டார்.
கோரக்கர் தன் தவறை உணர்ந்து போகரின் பாதங்களில் வணங்கினார். போகர் சீடரை தோளோடு அனைத்து உன் உயிர் போகும் தருனத்திலும் உன் உறுதிபாட்டிலிருந்து மாறவில்லை அதனால் தான் உன்னை காப்பறினேன். வேரு எந்த காரணமும் இல்லை என்றார். உன்னை பார்த்து யோகிகலும் ஞானிகளும் யோக ஞானத்தில் உறுதியாக நிற்கட்டும் என்று ஆசி வழங்கினார்.
இதனாலேயே அவன் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பான் என்ற பேச்சு இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன என்று கூறுகிறார்கள்.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்