பகவத் கீதை ஒரு வரியில் 18 அத்தியாயங்கள்- படித்ததில் பிடித்தது

Posted by

அத்யாயம் 1 தவறான எண்ணங்கள் மட்டுமே வாழ்வில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

அத்யாயம் 2 சரியான அறிவுதான் (நேர்மையான சிந்தனை) அனைத்துப் பிரச்சினைகளுக்கும்  முழுமையான தீர்வைத் தரும்.

அத்யாயம் 3 சுயநலமின்மையே முன்னேற்றத்திற்கும் வளமைக்கும் பாதையாக அமையும்.

அத்யாயம் 4 ஒவ்வொரு செயலும் இறைவனுக்கான வேண்டுதலாகவே அமைய வேண்டும்.

அத்யாயம் 5 எல்லையற்ற திறமையுள்ளவன் அனைத்தும் தன்னால் முடியும் என்ற கர்வத்தைத் துறந்து 

பேரின்பமயமான முடிவற்ற தன்மை வாய்ந்த பரமாத்மாவை அனுபவிக்க முயற்சி செய்.

அத்யாயம் 6  மேன்மையான உணர்வை எப்பொழுதும் தன்னுள் இருத்திக் கொள்.

அத்யாயம் 7 (நல்லவற்றைக்) கற்று உணர்ந்து அதற்கேற்ப வாழ்.

அத்யாயம் 8 எப்பொழுதும் நம்மால் முடியாது என்று எதையும் கைவிடாதே.

அத்யாயம் 9 உனக்கு அளிக்கப் ‌பட்டுள்ள திறமைக்கான பாராட்டுகளை வரமாகக் கொள்.

அத்யாயம் 10 உன்னைச் சுற்றி தெய்வீகம் நிறைந்துள்தைக் கண்டு கொள்.

அத்யாயம் 11 உண்மையைக் காண சரணடையதல் முக்கியம்

அத்யாயம் 12 மனதில் உயர்வான எண்ணங்களை மட்டுமே கொள்.

அத்யாயம் 13 மாயையிலிருந்து விடுபட்டு தெய்வீகத் தன்மையுடன் உன்னை இணைத்துக் கொள்.

அத்யாயம் 14 சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை உணர்ந்து வாழ்.

அத்யாயம் 15 தெய்வத் தன்மைக்கு முதலிடம் கொடு.

அத்யாயம் 16 நல்லது செய்யும்போது தானாகவே அதற்கான பரிசைப் பெறுவாய்.

அத்யாயம் 17 ஆற்றலின் ‌அடையாளம் என்பது மனதுக்கு உகந்த சரியானதை தேர்ந்தெடுப்பதுதான்.

அத்யாயம் 18 கடவுளைத் தேடி அவனுடன் ‌சேரும் முயற்சியில் ஈடுபடு (முக்தி அடைதல்)