பழக்கம் – குட்டி கதை

பிறப்பினால் அடிப்படை குணம் அமையும் என்றாலும், சூழலாலும் வளர்ப்பினாலும் அந்த குணம் மாறுபடும் என்றார் சூஃபி ஞானி.

அது எப்படி என்று கேட்டார்கள் சுற்றியிருந்தவர்கள். ஞானி ஒரு யானைக்கதையைச் சொன்னார்.

காட்டு வழியே போனது ஒரு யானைக்கூட்டம். அப்போது எதிரே வந்த அறிமுகமில்லாத ஒரு புது யானை என்கூட வாங்க நல்ல தீனி கிடைக்கும் என்று யானைகளைக் கூப்பிட்டது. புது யானை மீது சந்தேகப்பட்டு பல யானைகள் அழைப்பை நிராகரிக்க ஒரு யானை மட்டும் அதன் பின்னால் போயிற்று. பிற யானைகள் திரும்பிச் செல்ல மனமின்றி தம்மை விட்டுப் பிரிந்து செல்லும் யானையையே பார்த்துக் கொண்டிருந்தன. சற்றுத் தொலைவுக்கெல்லாம் பின் தொடர்ந்த யானை ஒரு பள்ளத்தில் விழுந்த்து. ஏமாற்றப்பட்ட வேதனையில் அது பிளிறியது.

பிற யானைகள் ஓடோடி வந்தன. நீ மோசக்காரன். நம் இனத்தவர்களையே காட்டிக் கொடுக்கிறாய் என்று ஏமாற்றிய யானையைத் திட்டித் தீர்த்தன.

இருக்கலாம் நானும் இதுபோல பிடிபட்டபோது என்னை ஏமாற்றிய யானையை இப்படித்தான் திட்டினேன். என்னை மன்னித்து விடுங்கள். என் இயல்பான சுபாவம் மாறிவிட்டது. நான் மக்களால் பிடிக்கப்பட்டு, அவர்களால் வளர்க்கப்பட்டு, பிற யானைகளைப் பிடிக்கவும் பழக்கப்பட்டேன் என்று சொன்னபடி தன் வழியே போயிற்று என்று முடித்தார் ஞானி கூடிநின்றவர்கள் புரிந்துகொண்டார்கள்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *