பாத்திரமும் நீரும்

பாத்திரமும் நீரும்

நீருக்கென்று தனி குணம் கிடையாது என்று நமது சித்தர்கள் கூறியுள்ளதை முந்தயை பதிவில் பகிர்ந்தேன். அதுபோல் நீரின் பண்பு பாத்திரத்திற்கு ஏற்றாற் போல் மாறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

அக்காலத்தில் அரசர்களும், செல்வந்தர்களும் தங்க மற்றும் வெள்ளி பாத்திரத்தில் நீரை ஊற்றி பருகினார்கள் என்பதை கேள்விபட்டிருப்போம். அது அவர்களின் செல்வசிறப்பை கண்பிப்பதற்கு மட்டும் அல்ல. அப்படி பருகுவதன் மூலம் அவர்கள் நோயின்றி நீண்ட ஆயிளுடன் வாழ வழி வகுத்துள்ளன.

பொற்கெண்டி தன்னில் வெந்நீர் பூரித்துட் கொண்டிடுங்கால்
மற்கொண்ட வாயுகபம் வாயருசி—ஏற்கொண்ட
மெய்யழல்வெப் புந்தணியும் விந்துவுநற் புத்தியொடு
மெய்யறிவு மோங்கு மென விள்.

வெந்நீரை தங்கப் பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்து அருந்தினால் வாதம், கபம் நீங்கும், சுவையின்மை, உடற்சூடு தணியும், சுக்கிலம் மற்றும் அறிவு பெருகும்.

சரிகை வெள்ளி கெண்டி தனிலெட்டி லொன்றாய்ப்
பெருகக்காய்ச் சும்புனலைப் பெய்தே – பருகங்கால்
வெப்பொடுதா கங்குன்மம் வீறுபீத்தக் காய்ச்சலும்போம்
துப்பொடுட லஞ்செழிக்குஞ் சொல்.

வெள்ளிப் பாத்திரத்தில் காய்ச்சிய நீரை ஊற்றி வைத்து அருந்தினால் உடல் சூடு, தாகம், குன்மம் எனப்படும் வயிற்று நோய்கள் பீித்தம் போகும், உடல் வன்மை அடையும்.

இரும்பு நறுங் கெண்டிதனி லேந்திய வெந்நீர்
விரும்பியுணப் பாண்டு விலகும் திரும்பவுமோ
தாதுவுமாம், நாடிகளுந் தாமுரக்கும் தேகமதிற்
சீதசுக முண்டாந் தெளி.

இரும்பு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி பருகுவதன்மூலம் ஹூமோகுளோப்பின் குறைப்பாட்டால் ஏற்படும் பாண்டு நோயை தடுக்கும் (உடல் வெளுத்துபோதல்) தாதுவை விருத்திபடுத்தும், நரம்புகளுக்கு வன்மை அளிக்கும் உடலில் வெப்ப நிலையை சமப்படுத்தும்.

இரும்புக்கு இரத்தத்தை விருத்தி செய்யும் பண்பு உண்டு


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *