புலியை நம்பிய பிராமணன் கதை – சுகிர்லாபம்

புலியை நம்பிய பிராமணன்

ஒரு கிழப்புலி, பலவீனத்தால் ஆகாரத்துக்கு வேட்டையாட முடியவில்லை.

ஏரிக்கரையில் தர்ப்பைப் புல்லைக் கையில் வைத்துக் கொண்டு எவனாவது வருகிறானா என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தது.

அந்த நேரம்பார்த்து ஒரு பிராமணன் அந்த வழியாக வந்தான்.

புலி, அவனைப் பார்த்தது, வாயில் தானாகவே எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது.

ஓ … பிராமணா….

புலி அவனை அழைத்தது.

குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தான் பிராமணன்.

யாரையும் காணவில்லை. புலிதான் தெரிந்தது.

நான்தான் அழைத்தேன் பிராமனோத்தமனே! இந்தா இந்தப் பொற்காப்பை வாங்கிச் செல் என்று புலி அழைத்தது. பழுத்துப்போன தரப்பைப் புல்லை பட்டமாக்கிக் காட்டியவாறு.

ஏழைப்பிராமணன் கண்ணுக்குப் புலி காட்டியது பொன் காப்பாகவே தோன்ரியது. காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் நிறம் – என்பதுபோல.

பொற்காப்பு வலியக் கிடைக்கிறதே என்ற ஆசை அவனை முன்னே தள்ள புலி ஆயிற்றே…. கிட்டே போகக் கூடாதே என்ற அச்சம் அவனைத் தயங்க வைத்தது. காப்புமீது ஆசை வைக்கக் கூடாது என்போமானால் புலி ஆயிற்றே… கொன்றுவிடுமே என்று அச்சப்பட்டோமானால் மரணத்துக்கு பலவகையிலும் வழி இருக்கிறதே!.

புலியைரே காப்பெங்கே இருக்கிறது? என்று கேட்டான் பிராமணன்.

இதோ பாரும்.

புலி மஞ்சள் தர்ப்பையை வட்டமாக்கிக் காட்டியது மீண்டும்.

உன்னிடத்தில் எனக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்றான் பிராமணன்.

நான் நகமும் பல்லும் போனவன். கிழவன் காலையில் நீராடி கடவுளைத் தியானித்துக் கொண்டிருக்கிறேன் யாகம் செய்தல், வேதம் ஓதுதல், தானம் கொடுத்தல், தவம் செய்தல், சத்திய நெறியிலிருத்தல். உறுதியான தெய்வ நம்பிக்கை. ஆசையின்மை. பொறுமை முதலிய எட்டு தருமங்களையும் நான் அறிந்தவன். அதன்படி நடப்பவன். இந்தக் காப்பு எனக்கு கிடைத்தது எனக்கு எதற்கு இது அதனால் இதை யார்க்காவது ஒரு ஏழைக்குக் கொடுக்க நினைத்திருக்கிறேன்.

எல்லாம் சரிதான் புலி மனிதரை அடித்துத் தின்னும் என்கிறார்களே ஜனங்கள்.

எனக்குத் தர்ம சாஸ்திரம் தெரியும் தன் பிராணன் தனக்கு எப்படித் தித்திப்போ அப்படியே எல்லார்க்கும் என்பது எனக்குத் தெரியும் எத்தனையோ பேர் சென்றார்கள் அவர்களுக்கெல்லாம் கொடுக்க எனக்குத் தோன்றவில்லை உன்னைப் பார்த்தால் மிகவும் தரித்திரனாகத் தெரிகிறது அதனால் உனக்குக் கொடுக்க என் மனம் ஆசைப்படுகிறது ஏழைக்கே கொடுக்க வேண்டுமென்று சாஸ்திரங்களும் சொல்கின்றன. மருந்தை நோயாளிக்குத்தான் தரவேண்டுமே தவிர ஆரோக்கியமானவனுக்கல்ல. ஏழைதான் நோயாளி பணக்காரர்தான் ஆறோக்கியமானவன். இந்தப் பொன் காப்பை உனக்குக் கொடுப்பதே தகும். அதனால் தான் மற்றவர்களை விட்டுக் காத்திருந்து உன்னைப் பார்த்ததும் அழைக்கிறேன் வா…. வந்து இந்தப் பொன் காப்பை வாங்கிச் செல்.

பிராமணன் புலியின் வார்த்தையால் ஈர்ப்புண்டவனாய் ஓரடி எடுத்து வைத்தான்.

ஏரியில் மூழ்கிவந்து பரிசுத்தமாகப் பெற்றுக்கொள் என்றது புலி,

பிராமணன் ஏரியில் இறங்கினான். நீருக்கடியில் சேறும் சகதியுமாக இருந்ததால் அவன் கால்கள் சிக்கிக் கொண்டன. நகர முடியவில்லை.

பிராமணா! பயப்படாதே நான் உன்னைச் சேற்றிலிருந்து விடுவிக்கிறேன்.

புலி மெதுவாக அவனை நெருங்கியது. ஆனால் சட்டென்று பிடித்துக் கொண்டது.

திக் கென்றது பிராமணனுக்கு.

துஷ்டர்கள் வேதத்தியானம் பண்ணியிருந்தாலும் தரும் சாஸ்திரம் அறிந்திருந்தாலும் அவர்களது வார்த்தையில் நம்பிக்கை வைக்கக்கூடாது எவனெவன் எப்படியோ அவனவன் அப்படித்தான். அந்த இயல்பு போகாது. யாசகம் பண்ணியே பழகிவிட்ட சுபாவத்தால் இந்த துஷ்டப் புலியின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து ….. என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே புலி அவனைக் கொன்றது. தின்றது

பாவம்  … பிராமணன் . பரலோகம் சேர்ந்தான்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *