தந்தாரே இன்னமொரு மார்க்கம்சொல்வேன்
தயவான புலிப்பாணி மைந்தா கேளு
சொந்தமுடன் அடியேனும் குளிகைகொண்டு
துப்புரவாய் மேருகிரி தன்னில்சென்றேன்
அந்தமுடன் பதின்மூன்றாம் வரையில்சென்று
அவ்வரையில் விநாயகரைக் காணேன்று
விந்தையுடன் அடியேனும் மனதூவந்து
விருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேந்தானே.
சித்தர் போகர் அவருடைய பிரதான சீடரான புலிப்பாணி சித்தரிடம் கூறுவதுபோல் இந்த பாடலை போகர் எழுதுகிறார். மேரு மலையில் பதிமூன்றாம் பகுதியில் விநாயகரின் சமாதியை கண்டதாக கூறுகிறார். எனக்கு தெரிந்து வரை மேரு மலை என்பது இமயை மலை அல்லது நம் தலை உச்சி. இந்த பாடலை இரு விதமாக நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாம்
நேரடியாக போகர் இமயமலைக்கு சென்று பார்த்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது போகரின் தியான வலிமை மூலம் அவர் உள்முகமா சென்று விநாயகரை தரிசித்து இருக்கலாம். ஆம் நமக்கு தியானம் கை கூடினால், நம் உள்முகமா சென்று அனைத்து தேவர்கள் முதல் ஆதி சிவன் வரை தரிசனம் பெறலாம்.
கூறவென்றால் சாரனைகள் என்னசொல்வேன்
கொபபெனவே வசிஷ்ட மகாரிஷியார்தாமும்
மாறலுடன் குளிகைக்கு வுறுதிசொல்லி
மகத்தான சாரனைகள் மிகவுஞ்செய்து ஆறவே
எந்தனுக்கு வதிகங்கூறி வப்பனே குளிகயிட
மார்ககங்கூறி சேறவே மகமேரு தன்னிலப்பா
தேற்றமுடன் செல்கவென்று வரந்தந்தாரே

மேருமலையில் விநாயகரின் சமாதி இருப்பதாக தெரிந்து கொண்டு அங்க செல்ல வசிஷ்ட மகரிஷியிடம் ஒரு குளிகை செய்ய கற்று கொண்டதாகவும். அந்த குளிகையின் துனையுடன் மேரு மலைக்கு சென்றதாக கூறுகிறார். குளிகை என்றால் மாத்திரை. சித்த பெருமக்கள் இப்படி மாதிரைகள் துனையுடன் வான் வழி செல்வது ,தன்னை மறைத்து கொள்வது என பல சித்துக்களை செய்வது வழக்கம்.
தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர்
தண்மையுடன் குருதனையே நினைந்துகொண்டு
தேனான பதின்மூன்றாம் வரையில்சென்றேன்
தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண கோனான
தும்பிக்கையுடைய மாண்பன் கொற்றவனாம்
கணபதியாம் என்றசித்து மானான மகதேவகன்
என்னுஞ்சித்து மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே.
அந்த குளிகைய செய்த பிறகு அவர் குருவான காலாங்கி நாதரை நினைத்துக்கொண்டு அந்த மாத்திரையை கொண்டு சென்றாராம். மேரு மலையில் பதிமூன்றாம் பகுதியில் விநாயகரின் சமாதியை கண்டதாக கூறுகிறார்.

காணவே விநாயகரின் சமாதிகண்டேன்
கருவான சமாதியது மூடவில்லை பூணவே
அங்குசமும் ஒத்தைக்கொம்பும் புகழான
யானைமுகம் சமாதிபூண்டு ஊணவே பூமிதனில்
சமாதிபூண்டு உறுதியுடன் இருகரமும்
ஏந்திக்கொண்டு மாணவே வெகுகாலம் இருந்தசித்து
மகத்தான மூன்றுயுகம் கண்டசித்தன்.
அந்த சமாதி முடப்படாமல் இருந்ததாகவும். அந்த சமாதியில் விநாயகர் அங்குசமும் ஒற்றை கொம்புடன் யானை முகமாக சமாதி நிலையில் பூமியில் இருக்க கண்டேன் என்கிறார். இரு கைளையும் ஏந்திக்கொண்டு சமாதி நிலையில் இருப்பதாக கூறுகிறார். விநாயகர் மூன்று யுகங்களை கண்ட சித்தன் என்றும் கூறுகிறார். அதாவது இந்த நான்காம் யுகமான கலியுகத்தில் சமாதி நிலையில் இருப்பதாக கூறுகிறார்.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்