மந்திரம், தியானம், மூச்சு காற்றை நிறுத்தவும் தேவையில்லை – அகத்தியர்

Posted by

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

அகத்தியரின் அகத்தியர் ஞானம் என்ற நூலில் இருந்து

இந்த பாடலை படிக்கும் போது நம்ம மனசு நல்லா இருக்க மந்திரம் தேவை இல்லை,தியானம்/ பிராணாயாமம் தேவையில்லை , மூச்சு காற்றை ஆறு ஆதாரங்களில் நிறுத்தவும் தேவையில்லை என்று அகத்தியார் கூறுகிறார்

இதல்லாம் எப்ப தேவையில்லை என்றால் ஒருவனுக்கு இயற்கையாகவே மணம் ஒருமைபட்டு இருந்தால் தேவையில்லை அதாவது சில மாகாண்களுக்கும் ஞானிகளுக்கும் பிறவிலேயே அவர்கள் அனைத்தையும் பெற்று இருப்பார்கள். உதாரணமாக ஞானசம்ந்தர், வள்ளலார் இவர்கள் எந்த யோகாவும் பண்ணதில்லை, மூச்சு காற்றை கட்டுபடுத்த எந்த வித தியானமும் செய்ததில்லை. இவர்கள் இயற்கையாகவே அனைத்தையும் பெற்றிருந்தனர். இவர்களே கடவளின் செல்ல பிள்ளைகள் நம் மணம் செம்மயையாக இருக்கவேண்டும் என்றால் மேலே அகத்தியர் சொன்ன அனைத்தயும் செய்தே ஆகவேண்டும். மணம் என்ற குரங்கு உண் வசம்வந்தால் அகத்திய பெருமான் சொன்னதுபோல் எந்த மந்திரமும் ஜெப்பிக்க தேவை இல்லை , தியானம் மற்றும் பிராணாயாமமும் செய்ய தேவையில்லை.