மனித நாடிகள் – திருமூலர்

உற்ற விபரம் உறுதியாம் என்நந்தி
பற்றிய மூலம் பகர்ந்திடும் நாடிதான்
எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்
மற்றதில் பத்து வளமான நாடியே.

வளமான பத்தில் வழங்குந் தசவாயு
உளமான இடைபின் சுழியென மூன்றுண்டு
களமான சக்கரம் காட்டியது ஆறுண்டு
தளமான மண்டலந் தான் மூன்றும் பாருமே

நந்தி வசிக்கும் மூலாதரத்திலிருந்து (நம் உடலில்  எருவாய்க்கும், கருவாய்க்கும் நடுவில் மூலாதரம் உள்ளது, ஏறக்குறைய முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது) எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் கிளம்பி உடல் முழுவதும் பரந்து நிற்கின்றன என்கிறார். இவற்றில் கீழ்கண்ட பத்து நாடிகள் மிக முக்கியமானவையாகும்.

இடை, பிங்களை, சுழிமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அஸ்தி, அலம்புடை, சங்கினி, குரு.

இப்பத்து நாடிகளுடன் தசவாயுக்களும் சேர்ந்து நிற்கும் என்கிறார். மேற்கூரிய தசநாடிகளில் மிக முக்கியமானவை இடை, பிங்களை, சுழிமுனை. இம்மூன்று நாடிகளின் வழியாகத்தான் ஆறாதாரச் சக்கரங்களும், மூன்றுமண்டலங்களும் பரவி நிறகின்றன.

பாரும் இடைகலை பின்கலை மாறியே
தாரும் பெருவிரல் காலொடு தானேறி
காரும் கழுத்தில் கபாலம் வரைநின்று
வாரும் இடமாய் வலக்கரம் சாருமே.

வலக்கரம் தன்னில் வளமான பின்கலை
நிலைந்த இடக்கரம் நின்றது இடைகலை
துலக்க நடுமையஞ் சுழிமுனை ஓடிடும்
பிலக்க இலை மூன்றால் பிறந்தது தாதுவே.

இடை நாடியானது வலது கால் பெருவிரலிலிருந்து மேலெழும்பி மூலாதாரத்தின் வழியாக இருதயத்துக்கு இடப்பக்கமாய் ஓடி கத்தரிக்கோலை போல் மாறி கபாலத்தின் இடது பக்கமாய் நிற்கும்.

இதைபோல் பிங்களை என்ற நாடியானது இடது கால் பெருவிரலிலிருந்து மேலேழும்பி மூலாதாரத்தின் வழியாய் இருதயத்துக்கு வலப்பக்கமாய் ஓடி கத்தரிக்கோலை போல மாறி கபாலத்தின் வலது பக்கமாய் நிற்க்கும்.

மேற்கூறிய இடை நாடியானது இடது கையிலும், பிங்களை நாடியானது வலது கையிலும் நிற்கும். இவற்றுக்கு மத்தியான சுழிமுனை நாடியானது முதுகெலும்புத் தண்டுவடத்தின் வழியாக மூலாதாரத்திலிருந்து கபால உச்சி வரை பாய்ந்து நிற்கும்.

இன்றய மருத்துவர்கள் SCAN, X-RAY மூலம் பார்த்து சொல்லும் செய்திகளை தன் ஞான அறிவினால் அன்றே சித்தர்கள் சொல்லி விட்டனர்.
மேலும் சில சுவாரசியமான தகவலுடன் அடுத்த பதிவில்………….நன்றி


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *