குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இராமதேவர் என்ற யாகோபு சித்தர் ஒரு வழியை அருளியுள்ளார். நல்ல அனுபவமுள்ள சித்த மருத்தவரிடம் ஆலோசனை செய்து முயற்ச்சித்து பார்க்கலாம்.

தட்டியெடு கொம்மட்டி வித்தெடுத்து
தாஷ்டிகமாய்த் தந்திவிரை யிடையேசேர்த்து
முட்டிதனி லடைத்துநின்று தூரிற்பொத்து
முக்கியமாய்க் குழித்தைலம் வாங்கிகொண்டு
சட்டமாய்ப் பேதிக்குக்கா சிடையேவிட்டுச்
சரியிடையாய் மஞ்சளது கலந்துகொண்டு
வட்டவளை மாதவிடாய் தன்னிலுண்ண
வையகத்திற் பாலனது உண்டாம்பாரே.
சட்டமாய்ப் பேதிக்குக்கா சிடையேவிட்டுச். இந்த வரிக்கான சரியாக தெரியவில்லை
கொம்மட்டி (பேய்க்கொம்மட்டி) காய் நடுவில் துளைப்போட்டு (வித்துக்களை எடுத்துவிட வேண்டும்). கொம்மட்டி காய் நடுவில் தந்திவிரையை(நேர்வாளம்) சேர்க்க வேண்டுமாம். குழித்தைலம் வாங்கி அதில் ஒரு காசு எடை மஞ்சள் சேர்த்து பெண்கள் மாதவிடாய் காலத்தில் உட்கொண்டால் தப்பாமல் கருத்தரிக்கும் என்கிறார்.
