வர்மத்தின் தொடர்ச்சி 2

வர்மத்தின்-தொடர்ச்சி

இந்த பதிவில் வர்மத்தில் முக்கியமான பத்து வகையான தசவாயுக்களின் செயல்களை பார்போம்.

பிராணன்
இதுவே உயிர்வாயு என்று அழைக்கப்படுகிறது. நாசி துவாரம் வழியாக உள்ளேச்சென்று மூச்சுப்பையை நிரப்பி பின் உடல் முழுவதும் பரப்பசெய்வதும், சீரணித்த உணவை உடல் முழுவதும் எடுத்துச் சென்று வளர்ச்சி அளித்தல். உடல் உறுப்புக்களில் வெளிப்பட்ட கெட்ட வாயுவை எடுத்துக்கொண்டு நாசித்துவாரம் வழியாக வெளியேற்றுவது.

அபானன்
உணவு சீரணத்தபின் தள்ளப்பட்ட அசுத்த வாயுவை வெளியே தள்ளுவது, பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடியையும்,சிசுவையும் வெளியே தள்ளுவது,

பெண்களுக்கு மாதவிடாயை வெளிப்படுத்துவது ஆகிய வேலைகளை இந்த தசவாயுவே செய்கிறது.


உதானன்
இதன் முக்கிய செயல் ஒலியை உண்டாக்குவது. குரல் காற்று என்று கூறலாம். இது உந்திலிருந்து தொடங்கி குரல்வளையில் இருப்பிடம் கொண்டுள்ளது. உணவுப் பாதையில் செரிமானத்திற்கும் உதவி செய்வது இதன் தொழில் எனப்படுகிறது.

வியானன்
உடலில் உள்ள அனைத்து அசைவுகளும் இந்த தச வாயுவின் மூலமே நடைபெறுகிறது.

சமானன்
தண்ணீர் முதல் கடினமான பொருள் மற்றும் எளிதில் சீரணிக்க முடியாத பொருள் வரை இந்த வாயு சமப்படுத்தி இரப்பைக்கும் குடலுக்கும் கொடுத்து செரிமானத்திற்கு உதவி செய்கிறது.

நாகன்
உடலில் உள்ள பாகத்தை சுருங்கவும் விரியவும் செய்வது இந்த தசவாயுவாகும். உதாரணமாக தொண்டை நாக்கு போன்றவற்றைச் சுருங்கவும் விரியவும் செய்வதால் பேச்சுக்குத் துணை செய்கிறது. மூச்சு பையை சுருங்கவும் விரியவும் செய்வதால் சீராண சுவாசத்திற்க்கு உதவுகிறது.

கூர்மன்
இது விழிக்காற்று எனப்படுகிறது. கண்களை திறப்பதும் மூடுவதும் இதன் செயலாகும்.

கிருகரன்
தும்மல், இரும்பல், விக்கல் போன்றவற்றை உருவாக்குவதும், காமம், கோபம் போன்ற உணர்ச்சிகளில் மணதில் படபடப்பையும்,உடலில் சூட்டையும் உண்டாக்குவது இதன் செயலாகும்.

தேவதத்தன்
கொட்டாவியை உண்டாக்குவது இந்த தசவாயுவின் செயலாகும்.

தனஞ் செயன்
இது வீங்கச் செய்யும் வாயுவாகும். உடலில் எங்கு அடிப்பட்டாலும் வீங்கசெய்வது இந்த வாயுவின் செயலாகும். மரணத்திற்கு பிறகு உடலை வீங்க செய்வது இந்த தசவாயுவே.

வர்மகலையின் மூலம் இந்த தசவாயுக்களை சரிவர இயங்க செய்வதனால் உடலில் உள்ள நோய்களை சரி செய்யமுடியும்.

வர்ம கலையை மருந்தில்லா மருத்துவம் என்றும் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *