ஊரப்பா அடக்கமென்ற காலந் தன்னை
உத்தமனே உனக்கறிய உரைப்பே னப்பா
ஆரப்பா வானாலும் காலங் கொண்டால்
அப்பனே கொண்டதலம் குளிர்ந்து காணும்
வேரப்பா சோதனையைப் பார்த்து கொண்டு
வித்தகனே திரைவளைந்து இளக்கு வாயே

வர்மத்தில் அடிப்பட்டால் அடிபட்ட இடம் குளிர்ந்து காணும். அதைக் சோதித்து பார்த்து முறைபடி இளகச் செய்யவேண்டும்.
வாயமென்ன இளகாத காலத்துக்கு
மாத்திரைதான் செகமூலி மாயோன் மயோன்
ஆயமென்ன குருமுடிப் பாகத்தி மூலி
அப்பனே நீயறிவாய் தாளியாகும்
ஞாயமென்ன சாறுபுழிந்து தருகும் போதுதானே
கற்றனன் கண்டத்தின் மேலேயுள்ள
கடினமுள்ள காலமது மூன்றேயப்பா
என்றனன் இதற்கு ஒதூல் பூச்சமோகோ
இடமறிந்து காலமதில் செய்யாவிட்டால்
கற்ற நூலாயாவும் பாழாய் போகும். – போகர் வர்மசூத்திரம்
வர்மம் இளகாதிருந்தால் அதை இளகச் செய்வதற்கு ஒரே வழிதான் உள்ளது. ஒரே மூலிகையான மாயவனாகிய விஷ்ணு பகவானுக்கு ஒப்பான மூலிகை. குரு முடிப்புக்கு அதிகமான ஆற்றல் மிகுந்து மூலிகை. ஆற்றோரங்களில் படர்ந்து காணப்படும் வல்லாரை என்ற மூலிகை. அதை பிடுங்கி வந்து சாறு பிழிந்து கொடுத்தால் எப்பேர்ப்பட்ட வர்மமும் இளகிவிடும்.
