வள்ளலாரை பற்றி வேலாயுதனார் கொடுத்த வாக்குமூலம்

வள்ளலாரை பற்றி வேலாயுதனார் கொடுத்த வாக்குமூலம்

சென்னை மாகாணத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் அவதரித்தவர் வள்ளற்பெருமானார். அவர் தம் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து வெகுகாலம் வசித்திருந்தார்

வள்ளலார் தம் ஒன்பதாம் வயதிலேயே, ஆரியர்களாலும் திராவிடர்களாலும் சரிசமானமாய் அபிமானித்தவர். அகத்தியர் முதலிய முனிவர்களால் எழுதப்பெற்ற பாக்களை ஒதாமலேயே மனப்பாடமாய் பாடும் நாவளத்தைப் பெற்றிருந்தார்.

நான் 1849 ஆம் வருடம் இவரது சீடனானேன். இவர் எவ்விடமிருந்து ஞானதீட்சை பெற்றார் என்பது யாருக்கும் தெரியமாட்டாது. எனறாலும், சில வருடங்களானதும், இவரை அநேக சீடர்களடுத்துச் சூழ்ந்து கொண்டிருந்தனர். இவர் சிறந்த ஒரு ஏமசித்தர். இவருக்கு மாமிசம் உண்பவர்களை மாற்றும் அற்புத சித்தி இருந்ததென்பது அனேகருக்குக் கண் கூடாம்.

இவருடைய பார்வை ஒன்றே, மாமிச உணவின் விருப்பத்தை ஒழிக்கபோதுமானாதயிருந்தது. இவர் பிறருடைய மனதில் நிகழுபவைகளை பார்க்கவல்லவர். இவர் 1855-ஆம் ஆண்டில் சென்னையை விட்டுச் சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர், கருங்குழி என்ற இடங்களுக்கு சென்று, அங்கு நீண்ட காலம் இருந்தார்.

அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பதுண்டு. இவர் எங்குச் சென்றாரென்பதை அறிவோர் எவருமிலர். இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.

இவர், உருவத்தில் சாதாரண உயரமுள்ளவர். மெலிந்த சாரீரமுடையவர். எலும்புகள் தெரியும், ஆயினும் வீரிய பலமுள்ளவர். நிமிரந்த தேகம். தெளிந்த மாநிற மேனியர். நீண்ட மெல்லிய நாசியுடைவர். பரந்த பொறி பறக்குங் கண்களை உடையவர். இவருடைய முகத்தில் சதா சற்று விசனக்குறி காணப்பட்டிருந்தது.

இவருடைய உடை, இரண்டு வெள்ளையாடையைத் தவிர வேறில்லை. (ஒரே ஆடையை உடுத்தியிருந்ததாகவும் கேள்வி) இவர் கடும் நிராகாரத் தபசி போலிருந்தார். இவர் இளைப்பாறினதாக எவரும் அறியமாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்பார். அப்பொழுதும் சில கவளத்தோடு திருப்தியடைவார்.

இரண்டு மூனறு மாத காலம்வரை உபவாச விரதம் எடுப்பார். அப்போது கொஞ்சம் சர்க்கரை கலந்த பானத்தைத் தவிர வேறொன்றும் உட்கொள்ளார்.

இவர் சாதிவேற்றுமை பார்க்காததால் மக்கள் அதிகமாக அதில் விருப்பமடையவில்லை எனினும், இவரை கான பல சாதியாரும் இவரை சுற்றி பெருங் கூட்டமாய்க் கூடினர் அவருடைய போதனைக்காக அல்ல, அவர் அற்புத சித்தி பெற்றவர் என்று கேள்வியுற்று அவ்வற்புதங்களைப் பார்க்க வந்தவர்களாவர். இவர், அவர்களுக்கு அவ்விதமானது ஒன்றும் இல்லையென்றும் எமது கொள்கை சமரச சுத்த சன்மார்க்கம் என்றும் அடிக்கடி வற்புறுத்திச் சொல்லுவார்.

அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஐந்தாரு வருடம்தான் அங்கு இருந்தது. தருமச் சாலையில் அநேக ஏழைகளுக்கும் தேகந்தளர்ந்த பலவீனர்களுக்கும் அன்னமும் உடையும் அளிக்கப்பட்டு வந்தது.

பெருமானார் ஐம்பொத்தோரு வயதைடைந்தபோது, தாம், உலகை விட்டுப்போவதாகச் சொல்லி,சீடர்களுடைய மனதை ஒருவகை ஆருதலுக்குக் கொண்டு வர ஆரம்பித்தார். சிலகாலம் நிட்டையில் அமரப் போவதாக தமது விருப்பத்தைகாட்டினார். 1872-ல் சாதி மத சமய பேதமற்று வழிபட பொதுவான சத்திய ஞான சபையை வடலுரில் நிறுவியருளினார். இவர், 1873 ஆம் ஆண்டில் ஆறூமாத காலமாக மன்பதை உலகுக்குள்ள சகோதர ஒற்றுமையைப் பற்றி வெகு விமரிசையாக போதித்தார்.

1874-ஆம் ஆண்டில் ஜனவரிமாதக் கடைசியில் பேசத் தொடங்கி இனி நடக்கப்போகும் விஷயங்களை எச்சரிக்கை கொடுத்தார். இவர் ஞான திருஷ்டியில் கண்டு சொன்ன விஷயங்கள்யாவும் தவறாமல் நிறைவேறின.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *