கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
சிறுதெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும், தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யாதிருத்தல் வேண்டும்.
பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்.
மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்.
சாதி, இனம், சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்.
எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி நடக்க வேண்டும்.
எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்.
இறந்தவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு. — வள்ளார்
உங்களுக்கு உயிர் இரக்கம் வரவேண்டுமா. வள்ளலார் அருளிய இந்த மந்திரத்தை நேரம் கிடைக்கும்பொழுது மனதிற்க்குள் செபியுங்கள். உயிர் இரக்கம் உங்களை வந்தடையும், உயிர் இரக்கம் வந்தால் அனைத்தும் உங்களை வந்தடையும்.