வள்ளலார் வாழ்கை வரலாறு – 1

வள்ளலார் வாழ்கை வரலாறு – 1

தமிழ் நாட்டில் கடலுர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்கு 20 கி மீ தொலைவில் உள்ள மருதூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் அவதரித்தார். பெருமானை பிள்ளையாக பெரும் பாக்கியம் இராமைய பிள்ளை , சின்னம்மையார் என்போருக்கு கிட்டியது. இவர்கள் சமயம் – சைவம். குலம் – வேளாண்குலம். மரபு – கருணீகர் மரபு. இராமைய பிள்ளை மருதூரின் கிராமக் கணக்கர் பிள்ளை மற்றும் கூட்டிப்பாடஞ் சொல்லும் கணக்காயராகவும் விளங்கினார். சின்னம்மையார், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்ன காவணத்தில் பிறந்து வளர்ந்தவர். இராமைய பிள்ளைக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர். ஐந்து மனைவியாரும் மகப்பேறின்றி ஒருவர்பின் ஒருவராக இறக்கவே இராமைய பிள்ளை இவரை ஆறாவதாக மணம் முடித்தார். இவர்களுக்குச் சபாபதி, பரசுராமன் என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமலை,சுந்தராம்பாள் என்னும் இரு பெண்மக்களும் பிறந்தனர்.
1823, அக்டோபர் 5, சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் பெருமானார் ஐந்தாவது மகனாக அவதரித்தார். பெற்றோர்கள் பிள்ளைக்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.

எட்டாம் திங்களில் இராமையபிள்ளை காலாமானார். சின்னம்மையார் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த பொன்னேரிக்கு சென்றார். சில காலம் பொன்னேரியில் வாழ்ந்து பின் சென்னைக்கு குடியேறினர். மூத்த பிள்ளையாகிய சபாபதி பிள்ளை, காஞ்சிபுரம் மாகவித்துவான் சபாபதி முதலியாரிடம் பயின்று புராணச் சொற்பொழிவாற்றுதலில் வல்லவராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார்.

தொடரும்……………..


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *