வள்ளலார் வாழ்க்கை வரலாறு 2

வள்ளலார் வாழ்க்கை வரலாறு 2

Posted by

வள்ளல் பெருமான் பள்ளி பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி பிள்ளையே அவருக்கு கல்வி பயிற்சியைத் தொடங்கிவைத்தார். பின்னர் தமதாசிரியராகிய காஞ்சிபுரம் மாகவித்துவான சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பினார். இளைய இராமலிங்கரின் (வள்ளலார்) அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும், கந்த கோட்டஞ் (சென்னை கந்தசாமி கோவில் பிராட்வே அருகில்) சென்று கவி பாடித் துதித்தலையும் கண்ட மகாவித்துவான் , இவ்விளைஞர் கல்லா துணரவும் சொல்லாதுணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்த மாகவித்துவான் அவருக்கு பாடம் கற்று கொடுப்பதை நிறுத்திவிட்டார். வள்ளலார் கற்க வேண்டியவற்றை இறைவனிடம் இருந்தே கற்றார். அவருக்கு குரு என்று யாரும் இல்லை.

காஞ்சிபுரம் மாகவித்துவான் வள்ளலாருக்கு கற்ப்பிப்பதை கைவிட்டதால். நாள்தோறும் கந்தக்கோட்டத்தில் பாடல் படியும் வீட்டில் தங்காதும் திரிந்தார். இவ்வாறு இருந்த பெருமானின் செயல் அவருடைய சகோதரர் சாபாபதி பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. பலமுறை கண்டித்து பார்த்தும் வள்ளலார் மாறவில்லை. இதனால் தமபிக்கு உணவளிக்க வேண்டாம் என்று மனைவியாரிடம் கூறிவிட்டார் பிறகு முழநேரமும் கோவில் குளம் என்று இருந்துவிட்டார். இதனால் வருந்திய அவருடைய அண்ணியார் பாப்பாத்தியம்மையார் சில பிள்ளைகளிடம் வள்ளலாரை அழைத்துவர சொன்னார். அன்னியார் வள்ளலாரிடம் தமையனார் இல்லாதபோது ஒருவேளையாவது விட்டிற்கு வந்து உணவருந்தி செல் என்றார். அவ்வாறே தினமும் ஒருவேளை உணவருந்தி செல்வார். சில நாடக்களில் சபாபதி பிள்ளை இதனை அறிந்தும் அறியாதுபோல் இருந்துவிட்டார். இவ்வாறு நாட்கள் பல சென்றன. ஒரு நாள் தந்தை இராமபிள்ளையின் திதி வந்தது. வீட்டில் விருந்து சிறப்பாக நடைப்பெற்றுது. தமபியார் உடனிருந்து உண்பதற்கு இல்லையே என்று சபாபதி பிள்ளை வருந்தினார் எனினும் மாலை வந்து அண்ணியாரிடம் உணவு உட்கொள்வார் என்று மணதை ஆருதல் செய்து கொண்டார். மாலையில் வள்ளலார் வீட்டிற்கு வந்து அண்ணியாரிடம் உணவு உண்டார். உணவு உண்ணும்போது அண்ணியாரின் கண்ணீர் வடிப்பதை பெருமான் கண்டார். காரணத்தை விணவிணார். உன்னை நினைத்துதான் வருந்துகிறேன் என்று கூறினார். அண்ணார் சொற்படி கேட்டு அடங்கி படித்திருந்தால் இவ்வளவு துன்பம் இல்லை உணக்கு, சொந்த விட்டிலேயே கள்வனை போல்த் தெரியாது வந்து உண்ண வேண்டியிருக்கிறதே என்று வருந்திக் கூறினார். வள்ளல் பெருமான் அண்ணியார் கணகலங்குவது பொருக்காமல் நாளை முதல் வீடுதங்கி படிப்பதாகக் கூறிச்சென்றார்.

தொடரும்…………….


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a Reply

Your email address will not be published.