வள்ளலார் வாழ்க்கை வரலாறு 3

வள்ளலார் வாழ்க்கை வரலாறு 3

அண்ணியார் விருப்பப்படி வள்ளல் பெருமான் மறுநாள் விட்டிற்கு வந்தார். தனக்கென ஒதுக்கப்பட்ட மேல்மாடி அறையில் புத்தகங்களுடன் சென்றுவிட்டார். அறைக்கதவை முடிக்கொண்டு தியானத்திலும் முருக உபாசனையிலும் முனைந்தார். உணவு உண்ணும்போது மட்டும் வெளியே வருவாரம். இவ்வாறு பல நாட்கள் அறையில் தியானத்திலும் இறைவழிபாட்டிலும் இருந்தார். ஒரு நாள் அவர் அறையின் சுவர் கண்ணாடியில் முருக்ப்பெருமான் கட்சியளித்ததாக கூறப்படுகிறது. அக்காட்ச்சியை குறிப்பதே சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் என்னும் பாடலாம்.

வள்ளல் பெருமானின் தமையனார் சபாபதி நோய்வாய் படவே சோமு செட்டியார் வீட்டில் நடைபெற்ற சொற்பொழிவு தடைப்பட்டது. தமையனார் வள்ளல் பெருமானை ஒரிரு பாடல்களை பாடி வழிபாடு செய்து முடித்துவர பனித்தார் அனால் அவையோர்கள் வள்ளல் பெருமானின் சொற்பொழிவு கண்டு மேலும் சொற்பொழிவாற்ற வேண்டினர். அவ்வாறே பெருமான் அன்றைய நாளுக்குரிய திருஞான சம்பந்தர் புராணத்தை இரவு நெடு நேரம்வரை சொற்பொழிவாற்றினார். அன்றுமுதல் பெருமானாரையே தொடர்ந்து சொற்பொழிவாற்றுமாறு அனைவரும் வேண்டினர். அதற்கிசைந்து வள்ளல் பெருமானார் சிலகாலம் சொற்பொழிவாற்றினார்.

வள்ளல் பெருமான் சென்னையில் உள்ள திருவொற்றியூர் தொடர்ந்து சென்று வடிவுடைய அம்மனையும் தியாகப் பெருமானையும் வழிபட்டு வரத்தொடங்கினார். தொடர்ந்து இருப்பத்துமூன்றாண்டு காலம் பெருமானார் திருவொற்றியூர் சென்று வடிவுடை அம்மனை வழிபட்டுவந்தார். இக்காலக்கட்டத்தில் ஐந்து திருமுறைகளை எழுதப்பட்டது. ஒரு நாள் திருவொற்றியூர் சென்று இரவு காலங்கடந்து விடுதிரும்பிய வள்ளல் பெருமான் திண்ணையில் பசியோடோபடுத்து சோர்ந்தபோது வடிவுடையம்மை அண்ணியார் வடிவில் தோன்றி உணவளித்ததாக கூறப்படுகிறது.

வேலயுத முதலியாருக்கு வள்ளல் பெருமானின் புலமையில் நம்பிக்கையில்லை அதனால் அவர் தாமே நூறு செய்யுள்களை எழுதி இவை சங்கச்செய்யுள்கள் என்று வள்ளல் பெருமானிடம் கொடுத்து அவற்றின் பொருள் கேட்டார். அதை படித்து வள்ளல் பெருமான் இவை சங்கச்செயுள்கள் இல்லை சங்க பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது. இப்படால்கள் இன்றைய காலத்தில் யாரோ ஒரு கத்துக்குட்டி எழுதியது என்று பளிச்சென்று சொலிவிட்டார். வேலாயுதனார் வெட்க்கி தலைகுனிந்து வள்ளல் பெருமானிடம் மன்னிப்பும் கேட்டார். அன்றிலிருந்து வேலாயுத முதலியார் வள்ளல் பெருமானின் மாணவரானார். வேலாயுதனாரின் மகன் திருநாகேசுவரரும்,வேலாயுதனாரிடம் பின்னாளில் மாநிலக் கல்லுரியில் பயின்ற பம்மல் சம்பந்த முதலியாரும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்துகின்றனர்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *