வள்ளாலார் மட்டுமா ஒளிதேகம் அடைந்தார் சிறிது வரலாற்றை புரட்டி பார்போம்.

வள்ளலார்

மாணிக்கவாசகர் (9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) சிதம்பரத்தில் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஜோதியில் கரைந்துவி)ட்டார் எச்சமோ கருகிய உடலோ கிடைக்கவில்லை.

பட்டிணத்தார் (கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) அவர் மீனவ சிறுவர்களுடன் விளையாடும்போது ஒரு கூடையில் ஒளிந்தார் மீண்டும் அந்த கூடையை திறக்கும்போது அவர் காணவில்லை அவர் மறைந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் மட்டுமே இருந்தது.

மத்துவர் (வாழ்ந்த காலம் 1238 to 1317) இந்த மாகணின் இறுதி நேரத்தில் அவர் மேல் மலர்கள் வாணிலிருந்து விழுந்தது. அனைத்து பூக்களும் அவரின் உடலை மறைத்தது. பூக்களை எல்லாம் அகற்றி பார்க்கும்போது அவருடைய உடல் காணாவில்லை.

ஆண்டாள் (7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்)  இவர் ஸ்ரீரங்கத்தில் கருவறையில் ஒளிதேகம் அடைந்தார்

திருஞானசம்பந்தர் (7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) இவருடைய திருமணத்தில் வந்த அணைவரும் ஜோதியில் கலந்து ஒளிதேகம் அடைந்தனர்.

மீராபாய் (கி.பி 1498 – கி.பி 1547) இவர் தன் இறுதிகாலத்தில் குஜராத்தில் உள்ள தூவாரகைக்கு சென்று அங்கு உள்ள ஒரு கிருஷ்ணர் விக்ரகதின் முன்பு பாடிக்கொண்டே  அனைவருடைய கண்ணேதிரிலேயே மாயமாக மறைந்து இந்த பிரபஞ்சத்தோடு கலந்தார்.

இப்படி பல மாகாண்களை சொல்லிக்கொண்டே போகலாம் ஏனெனில் உண்மையான ஆன்மீகவாதியின் இறுதிமுடிவு அவருடைய தேகம் மண்ணில் விழாமல் இந்த பிரபஞ்த்தோடு கலப்பதே. மேலே உள்ள அனைத்துமே நடந்த வரலாறு புராணங்கள் அல்ல.  

இத்தனை பேர் ஒளிதேகமடைந்திருக்க வள்ளலார் மட்டுமே அறையை பூட்டிக்கொண்டு ஒளிதேகமடைந்தார் என அஞ்ஞான வள்ளலார் பக்த்தர்கள் வெட்டி பெருமை பேசீ திரிகிறார்கள். சன்மார்க்க சங்கங்கள் வெட்டி பெருமை பேசிக்கொணடிருக்கும் சங்கமாகிவிட்டது மற்றும் சன்மார்க சங்கங்கள் வெறும் அன்னதான சத்திரமாகிவிட்டது. அவருடைய கொள்கைகளை பின்பற்றுவோர் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை.

வள்ளல் பெருமான் புலாலையும் மறுக்க சொன்னார் மற்றும் வன்புலாலையும் மறுக்க சொன்னார். புலால் மறுப்பாளர்கள் எத்னை பேர் வன்புலாலையும்  மருத்தார்கள் என்பது கேளவிக்குறியவையே