இதன் முந்தய பகுதியில் நாம் இரண்டு நம்பர்களை Client சைடிலிருந்து பெற்று அதை கூட்டி. கூட்டு தொகையை Client ற்கு ரேஸ்பான்ஸாக அனுப்பினோம்.
இங்கு Client என்பது Browser. Browser வழியாக நாம் இரண்டு நம்பர்களை அனுப்பினால் மட்டுமே நம் Servlet இரண்டு நம்பரை கூட்டும். அனுப்பவில்லை என்றால் Null Pointer Exception யை Server Client க்கு அனுப்பும். இந்த Null Pointer Exception யை அனுப்பாமல் எப்படி ஒரு அழகான மெஸேஜை அனுப்பி வைப்பது என்று இந்த காணொளியில் பார்போம். இந்த மாதிரியான புரோகிராம்களுக்கு வலிடேஷன்(Validation) என்று பெயர். இந்த Validation Program மூலமாக Client அனுப்பப்படும் டேட்டா ஒழுங்கானதா என்று கனித்து அதற்கேற்றார்போல் ஜாவா Servlet Client க்கு Response dataவை அனுப்பும். இந்த புரோகிராமில் Client ஒரு உண்மையான நம்பர்களை அனுப்பினால் மட்டுமே இரு நம்பர்களை கூட்டும் இல்லையேன்றால் Clientக்கு ஒரு Error Message யை அனுப்பிவிடும். அதாவது Server Response like “The entered number is not valid” என்று ஒரு மெஸேஜை அனுப்பிவிடும்.
இந்த முழு காணொளி மூலமாக எப்படி Client data Validate செய்வது என்று உங்களால் புரிந்து கொள்ளமுடியும். இந்த காணொளியை பாருங்கள் புரிந்து கொள்ளுங்கள்.